‘அண்ணன் கேட்ட ஒரு கேள்வி’.. ஆத்திரத்தில் கொன்று வீட்டிற்குள் புதைத்த தம்பி!.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jul 04, 2019 06:26 PM

அண்ணியுடன் தகாத உறவில் இருந்த தம்பியை தட்டிக்கேட்ட அண்ணை கொன்று வீட்டிற்குள் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Murder for illegal affair in Cuddalore

நாகை மாவட்டத்தில் உள்ள கூழையாறு கிராமத்தை சேர்ந்த முருகதாசன் என்பவருக்கு, கடலூர் மாவட்டத்தில் உள்ள சி.புதுக்குப்பம் பகுதியை சேர்ந்த சுமிதா என்பவருடன் கடந்த 2001 -ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இதனை அடுத்து இருவரும் கடலூர் துறைமுகம் அருகே உள்ள சிங்காரத்தோப்பில் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் முருகதாசன் வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். இதனால் முருகதாசனின் தம்பி சுமேர் என்பவர் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த சுமிதாவுக்கு உதவிகள் செய்து வந்துள்ளார். இது நாளைடைவில் தகாத உறவில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 2013 -ம் ஆண்டு முருகதாசன் நாடு திரும்பியுள்ளார். இதனை அடுத்த சில நாட்களில் முருகதாசன் காணமல் போயுள்ளார். இதனால் முருகதாசன் மீண்டும் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டதாக உறவினர்கள் நம்பியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சுமிதாவும், சுமேரும் திடீரென காணமல் போயுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த முருகதாசனின் தாயார் அவரது பாஸ்போர்ட் வீட்டில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை அடுத்து தனது மகன் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் போலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் சுமிதாவும், சுமேரும் கேரளாவில் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், அண்ணியுடன் தகாத உறவில் இருந்தது குறித்து கேட்டாதால் முருகதாசனை கொன்று வீட்டிற்குள் புதைத்தாக தெரிவித்துள்ளார். இதனால் இவர்கள் இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்த போலிஸார் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags : #NAGAPATTINAM #MURDER #BROTHER #CUDDALORE