'கழுத்தை நெரித்த பண பிரச்சனை?'... '3 வயது குழந்தையுடன், பெண் எடுத்த பாதக முடிவு'... பதறவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 15, 2019 11:37 AM

ஹைதராபாத்தில் 3 வயது குழந்தையுடன், 33 வயது பெண்மணி ஒருவர் 4வது மாடியிலிருந்து, குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

mother jumped from 4th floor with 3 year old survive

ஹைதராபாத்தின் குகட்பல்லியில் உள்ள பாலாஜி நகர் அபார்ட்மெண்ட் பகுதியில் 4வது புளோரில் வசித்து வந்த, ராமமூர்த்தி, பத்மஜா தம்பதியருக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆன நிலையில், 2 குழந்தைகள் உள்ளனர். இருவருக்குமிடையே பொருளாதார ரீதியாக குடும்பத்தை நிர்வகிப்பதில் கடுமையான தகராறு நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை, கணவர் ராமமூர்த்தியிடம் தன்னையும் குழந்தைகளையும் வெளியில் அழைத்துச் சென்றுவருமாறு பத்மஜா கேட்டுள்ளதாகவும், ஆனால் அதற்கு ராமமூர்த்தி மறுத்ததாகவும், இதனால் இருவருக்குமிடையே தகராறு எழுந்ததாகவும் கூறப்படுகிறது.  இதனைத் தொடர்ந்து அன்று இரவு 11 மணி அளவில், 4வது மாடியில் இருந்து தனது இரண்டாவது குழந்தையான 3 வயது குழந்தையுடன் பத்மஜா குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஆனால், குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது. சம்பவ நாளின் சிசிடிவி  காட்சிகளில், பத்மஜா குதித்ததுமே, ஓடிச் சென்று பத்மஜாவை, ராமமூர்த்தி சென்று தூக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து, பத்மஜாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், போலீஸார் விசாரித்துக் கொண்டு வருகின்றனர்.

Tags : #SUICIDEATTEMPT #HYDERABAD #HUSBANDANDWIFE