'தலைக்கேறிய போதை'... 'தந்தை செய்த வெறிச் செயல்'... '7 வயது சிறுமி'க்கு நேர்ந்த பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jul 10, 2019 03:34 PM

நெல்லையில் 7 வயது சிறுமியை தந்தையே அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையை மறைக்க சிறுமியின் தாயும் உதவியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Drunk father killed his 7 year old girl in tirunelveli

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கைலாஷ். திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வரும் இவர், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். குடி பழக்கத்திற்கு அடிமையான இவர், அவ்வப்போது குடித்து விட்டு வீட்டில் வந்து மனைவியுடன் பிரச்னை செய்வது வழக்கம். இதனிடையே கடந்த திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்த கைலாஷ் மிகுந்த குடி போதையில் இருந்துள்ளார்.

இதையடுத்து மனைவியுடன் சண்டையிட்ட அவர், மனைவியை அடிக்க முயற்சித்துள்ளார். தந்தை செய்வதை பார்த்துக் கொண்டிருந்த 7 வயது மகள் சுகிர்தா, அவரை தடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் போதையில் இருந்த கைலாஷ் சண்டையை தடுக்க வந்த மகள் சுகிர்தாவையும் தாக்கியுள்ளார். இதில் கீழே விழுந்த சிறுமி சுகிர்தா மயங்கி இருப்பதாக நினைத்த பெற்றோர், அவரை அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி இறந்து விட்டதாகக் கூறி அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே அம்பாசமுத்திரம் மருத்துவமனையில் சிறுமி மாடியில் இருந்து விழுந்து விட்டதாக மருத்துவர்களிடம் கைலாஷ் கூறியுள்ளார். ஆனால் ஆனால் சிறுமியின் முகத்தில் காயமிருந்ததால்,  சந்தேகமடைந்த மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் சுகிர்தாவின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டார்கள். அதில் சிறுமியின் தந்தை கைலேஷ் சிறுமியை அடித்து கொன்றது தெரியவந்தது. மேலும் அதற்கு அவரது மனைவியும் உதவியாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : #MURDER #DAUGHTER #TIRUNELVELI