'மருமகளுக்கு பாலியல் தொல்லை தந்த மாமனார்'... 'மாமியார் செய்த காரியம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jul 05, 2019 05:53 PM

மருமகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த கணவனை, கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக மனைவி போலீசில் சரணடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sexual harassment to daughter in law at paramakudi murder case

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காவல்நிலையத்தில் குடும்பத் தகராறில் தனது கணவரை கொன்றுவிட்டதாக பாண்டியம்மாள் என்ற பெண் சரணடைந்தார். உடனடியாக அவரது வீட்டுக்கு விரைந்த போலீசார், கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த முனியாண்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாண்டியம்மாளிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவந்தது.

முனியாண்டி - பாண்டியம்மாள் தம்பதியின் மகன் பாண்டி ரயிலில் இருந்து தவறி விழுந்து கால்களை இழந்தவர் என்று கூறப்படுகிறது. பாண்டியும் அவரது மனைவி மலரும் முனியாண்டி - பாண்டியம்மாள் தம்பதியரோடு ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். பாண்டி - மலர் தம்பதியருக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை இல்லை என்று கூறப்படும் நிலையில், முனியாண்டி அவ்வப்போது மருமகள் மலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையறிந்து பாண்டியம்மாள் முனியாண்டியை பலமுறை கண்டித்துள்ளார்.

ஆனாலும் முனியாண்டி தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளாமல் தொடரவே, அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார் பாண்டியம்மாள். அதன்படி மூன்று பேர் கொண்ட கூலிப்படை கும்பலை வைத்து கணவர் முனியாண்டியை, பாண்டியம்மாள் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பாண்டியம்மாளின் இந்த வாக்குமூலத்தை வைத்து அவரை கைது செய்த போலீசார், கூலிப்படை கும்பலை தேடி வருகின்றனர்.

Tags : #MURDER #SEXUALHARASSMENT