'8 மாத கர்ப்பிணி'ன்னு கூட பாக்காம'...'இப்படி பண்ணிட்டாங்களே'... 'உறைந்து நின்ற காவல்துறையினர்'!
முகப்பு > செய்திகள் > உலகம்By Jeno | Jul 01, 2019 01:21 PM
எட்டு மாத கர்ப்பிணிப் பெண்ணை குத்தி கொலை செய்த சம்பவம் காவல்துறையினரை அதிர செய்துள்ளது. இது மிகவும் கொடூரமான கொலை என காவல்துறையினர் பதிவு செய்துள்ளார்கள்.

தெற்கு லண்டனின் குரோய்டோனில் உள்ள குடியிருப்பில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கத்தி குத்து காயங்களுடன் மயங்கி கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காயங்களுடன் கிடந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஆனால் அந்த பெண் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். 26 வயதான கெல்லி மேரி என்ற அந்த பெண் கத்திக் குத்துக் காயத்துடன், மாரடைப்பும் ஏற்பட்டதால் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதனிடையே 8 மாத கர்ப்பிணியான அந்த பெண்ணின் வயிற்றிலிருந்து, குழந்தை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். குழந்தையானது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்த கொலையில் தொடர்புடைய இருவரை காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் எதற்காக இந்த கொடூர கொலையில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
