‘காரில் வைத்து எரித்துக் கொன்ற நண்பர்கள்’... ‘இளைஞரின் கொலையில் பரபரப்பு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jul 09, 2019 03:43 PM

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, காரில் எரிந்த நிலையில் இளைஞர் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

youth killed by his friends due to sexual abuse reason

வேலாயுதம்பாளையம் கணவாய் பகுதியில், கடந்த திங்கள்கிழமை காலை கார் ஒன்று எரிந்த நிலையில் நின்று கொண்டிருந்தது. அவ்வழியாகச் சென்ற சிலர், அருகில் சென்று பார்த்த போது, காருக்குள் ஒருவர் எரிந்து எலும்புக் கூடாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நடத்தப்பட்டட விசாரணையில், அந்தக் கார் கோவிலூரைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் மகாமுனி என்பவருடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

காரை ஓட்டி வந்தது அவருடைய மகன் சிவா என்பதையும், கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு அவர் தோப்புப் பட்டி கிராமத்திற்கு, கரகாட்டம் பார்க்கச் சென்றதையும் போலீசார் உறுதி செய்தனர். மின் கசிவு ஏற்பட்டு கார் எரிந்து சிவா உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், அவரது நண்பர் விவேக்கைப் பிடித்து விசாரித்த போது, இது திட்டமிட்ட படுகொலை என்பது உறுதியானது. நண்பன் எனக் கூறி கொண்டு விவேக்கின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தபோது, அவருடைய மனைவிக்கு, சிவா பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த விவேக், சிவாவை பல முறை எச்சரித்த போதும், அவர் கேட்கவில்லை. எனவே சிவாவை கொலை செய்ய வேண்டும் என்று எண்ணிய விவேக், தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் வைத்து எரித்து கொலை செய்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் சிவாவின் நண்பன் உள்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : #MURDER #FRIENDS