'உன்ன நம்பி தானே வந்தேன்'... 'காதலன் செய்த வெறிச்செயல்'... சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jul 06, 2019 01:37 PM

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவத்தின் தாக்கம் இன்னும் ஓயவில்லை. அதே போன்று சிறுமியை அவரது காதலன் உள்பட 6 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பொள்ளாச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

16 year old girl is molested by her boyfriend in pollachi

பொள்ளாச்சியை சேர்ந்த 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தயார் இறந்து விட அவரது தந்தை வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார். இதனால் ஆதரவில்லாமல் இருந்த சிறுமியை அவரது பாட்டி வளர்த்து வந்தார். இதனிடையே அந்த சிறுமிக்கும் பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில், சிறுமி சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனை அறிந்து கொண்ட அந்த வாலிபர், தனது வீட்டிற்கு வருமாறு அந்த சிறுமியை அழைத்துள்ளார். தன்னுடைய காதலன் தானே என்ற நம்பிக்கையில் சிறுமியும் அந்த வாலிபரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து இருவரும் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்த போது, திடீரென சிறுமியின் காதலனின் நண்பர்கள் 5 பேர் வீட்டுக்குள் நுழைந்தனர்.

இதனை சற்றும் எதிர்பாராத அந்த சிறுமி சற்று திகைத்து போனார். இதனிடையே கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் 6 பேரும் கும்பலாக சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர். இதனிடையே நம்பி வந்த காதலனின் வெறி செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி, அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்து தனது உறவினர்களிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார்.  இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,சிறுமியை கும்பலாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற அவரது காதலன் உள்பட 6 பேரை, காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்தனர். 16 வயது சிறுமிக்கு நேர்ந்த இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SEXUALABUSE #SCHOOLSTUDENT #POLLACHI #BOYFRIEND