'மொதல்ல சொன்னேன்.. அப்றம்தான்'.. தமிழகத்தையே நடுங்க வைக்கும் 'இன்னொரு' ஆணவக்கொலை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jul 02, 2019 11:24 PM

திருச்சியில் நிகழ்ந்துள்ள இன்னொரு ஆணவக் கொலை, தமிழ்நாட்டை மேலும் நடுநடுங்க வைத்துள்ளது. திருச்சி, பாலக்கரை அருகே உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்த சத்திய நாராயணன் என்பவரும், இவரது வீட்டின் அருகே வசித்து வரும் சந்தியாகு என்பவரின் மகள் நிவேதாவும் காதலித்து வந்துள்ளனர்.

Trichy girl\'s brother kills her lover Honour Killing

சமூக வலைத்தளங்கள் மூலம் பேசிக்கொள்வது, செல்போன் உரையாடல், அவ்வப்போது வெளியே சென்று வருவது என்று இருந்த இவர்களின் காதல் விவகாரம் இவர்களின் இருவீட்டிற்கும் தெரிய வந்தது. உடனே காதலுக்கு எதிர்ப்பு வலுத்தது. குறிப்பாக நிவேதாவின் அண்ணன், வினோத் கடுமையாக இந்த காதலை எதிர்த்துள்ளா.

ஆனால் எதையும் பொருட்படுத்தாமல், மேற்கொண்டு இந்த ஜோடிகள் காதலித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரம் கொண்ட வினோத் இரவு வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய சத்தியநாராயணனைச் சந்தித்து, இந்த காதலுக்கு, தான் சம்மதிப்பதாக பொய் கூறி, அப்பகுதியில் உள்ள பசுமடம் நாகம்மாள் கோயில் தெரு அருகில் உள்ள, பகுதிக்கு சத்தியநாராயணனை வினோத், லாவகமாக பேசி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய வினோத், சத்திய நாராயணனையும் குடிக்க வைத்துள்ளார். போதை தலைக்கேறிய பின்னர், வினோத் தன் நண்பர்களுடன் சேர்ந்து பீர் பாட்டிலால் சத்தியநாராயணனின், தலையில் அடித்தும் உடலில் குத்தியும் காயத்தை ஏற்படுத்தியுள்ளார். அப்போது அலறிய சத்தியநாராயணனின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தததைப் பார்த்த வினோத்தும் அவரது நண்பர்களும் தப்பித்து விட்டனர்.

ஆனாலும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சத்தியநாராயணன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கரை காவல் ஆய்வாளர் தலைமையில் விசாரணை செய்யப்பட்டு, பின் இந்த விவகாரத்தில் வினோத் கைது செய்யப்பட்டார். அவரது நண்பர்கள் சிலர் தலைமறைவாக உள்ளனர். இதுபற்றி பேசிய வினோத், தன் தங்கையை தன் வீட்டுக்கு எதிரே குடியிருந்த சத்தியநாராயணன் காதலித்த விவகாரம் தெரிய வந்ததும் அவர்களிடம், இந்த காதலை விட்டு விடும்படி சொல்லி பார்த்தும் கேட்கவில்லை என்பதால், தனியே அழைத்துச் சென்று நண்பர்களின் உதவியுடன் சத்தியநாராயணனை தீர்த்துக் கட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags : #TRICHY #LOVE #MURDER #HONOURKILLING