'ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்'... 'பதறவைத்த சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Jul 09, 2019 11:47 AM

ஒடிசாவில் ஒன்றரை வயது குழந்தையை, அதன் உறவினரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

17 Month Old Girl Raped By Relative In Odisha

மயூர்பஞ்ச் மாவட்டத்தில் குண்டா என்ற மலைவாழ் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், வீட்டிலிருந்து விளையாடுவதற்காக வெளியே தன்னுடன் தூக்கிச் சென்ற ஒன்றரை வயது குழந்தையை, அதன் உறவினரே பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரை பிடிக்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால், அவர் குழந்தையை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். இதையடுத்து குழந்தையை மீட்ட அப்பகுதி மக்கள், குழந்தையின் பெற்றோரிடம் தெரிவித்தனர். அதன்பின்னர் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்ததாகத் தெரிகிறது.

அதில் போலீசார் ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி குண்டா கிராம மக்கள் திரண்டு சென்று, மயூர்பஞ்சில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பலாத்காரம் செய்யப்பட்ட குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், தப்பிச் சென்ற குற்றவாளியைத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags : #ODISHA #SEXUALABUSE #MINORRAPE