'முன்னாள் கணவருடன் தொடர்பில் இருந்த பெண்'... 'ஏமாந்த கணவன் செய்த வெறிச் செயல்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Jul 13, 2019 10:50 AM
ஏற்கனவே திருமணமான பெண் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து, பழைய கணவருடன் தொடர்பில் இருந்த மனைவியை இரண்டாவது கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லுதியானா பகுதியை சேர்ந்தவர் குருசரண். இவருக்கும் சுரிந்திரா என்ற பெண்ணிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமண வாழ்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மனைவி சுரிந்திராவின் நடவடிக்கையில் குருசரணிற்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் சுரிந்திரா குறித்து அவருக்கு தெரியாமல் விசாரித்துள்ளார். அப்போது சுரிந்திராவிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும், அவர் குருசரணை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதையும் அறிந்து அதிர்ந்து போனார்.
இது குறித்து சுரிந்திராவிடம் கேட்டபோது ''முன்னாள் கணவரிடமிருந்து முழுமையாக பிரிந்து விட்டதாகவும், தற்போது அந்த குடும்பத்துடன் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் கூறியுள்ளார். ஆனால் ரகசியமாக சுரிந்திரா அவரது முதல் கணவர் மற்றும் குழந்தைகளுடன் தொடர்பில் இருந்ததை குருசரண் கண்டுபிடித்தார். இதனால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட, இந்த விவகாரம் காவல்நிலையம் வரை சென்றது.
இது குடும்ப விவகாரம் என்பதால் காவல்துறையினரும் இருதரப்பினரையும் அழைத்து சமாதனம் செய்தனர். ஆனால் குருசரண் சமாதானம் அடையவில்லை. சுரிந்திரா தன்னை திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாக ஆத்திரத்தில் இருந்தார். இதையடுத்து காவல் நிலையத்திலிருந்து சுரிந்திரா வெளியே வந்த போது குருசரண் அவரை கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கினார். இதில் சுரிந்திரா சம்பவ இடத்திலேயே அவர் பலியனார். இதையடுத்து குருசரணை காவல்துறையினர் கைது செய்தார்கள். இந்த சம்பவம் லுதியானா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.