'மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு'... ‘குடிபோதையில் கணவன் செய்த அதிர்ச்சி காரியம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jul 24, 2019 04:50 PM

குழந்தை சிவப்பாக பிறந்ததால், மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு, குடிபோதையில் கணவரே மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

women brutally murdered by her husband in cuddalore

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே, மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்த ராஜன் என்பவருக்கு, மனைவி அமலா மற்றும் 5 மாத ஆண் குழந்தை உள்ளது. இவர் வரதட்சணை கேட்டு அடிக்கடி மனைவி அமலாவிடம் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், குழந்தையின் நிறம் சிவப்பாக இருப்பதை குறிப்பிட்டும், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. சுரேசுக்கு குடிபழக்கம் இருந்தது. இதனால் அவர் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமையன்று சுரேஷ் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் மனைவியின் முகத்தில் தலையணையால் அமுக்கியதாகத் தெரிகிறது. இதில் அமலா மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி இறந்ததை அறிந்ததும் சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இன்று காலை சுரேஷ் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வெகுநேரமாகியும் அமலா தூக்கத்தை விட்டு எழுந்திருக்கவில்லை.

இதனால் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் சுரேஷை காணாததால், அமலாவை எழுப்பியுள்ளனர். ஆனால் படுக்கையில் அவர் இறந்து கிடக்கவே, அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் அமலாவின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சுரேஷை தேடினர். அதற்குள் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையம் சென்ற சுரேஷ், மனைவியை கொலை செய்ததாக சரணடைந்தார்.

மேலும், குழந்தை சிவப்பாக பிறந்ததால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை தலையணையால் முகத்தில் அழுத்தி, கொலை செய்ததாக சுரேஷ் வாக்குமூலம் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #MURDERED #CUDDALORE #HUSBANDANDWIFE