பள்ளிக்கு முன்பு ஆசிரியரை சரமாரியாக கத்தியால் குத்திய நபர்..! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jul 08, 2019 10:55 PM

தூத்துக்குடியில் பட்டப்பகலில் அரசு பள்ளி ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Government school teacher murdered in Tuticorin

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில், வட்டார மையம் சிறப்பு பள்ளியில் வடிவேல் முருகன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இதில் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில ஆண்டுகளாக வடிவேல் முருகன் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் வடிவேல் முருகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வடிவேல் முருகன் மனைவியின் சகோதரர் அற்புதம் என்பவர் இன்று மாலை பள்ளிக்கு வடிவேலை தேடி சென்றுள்ளார். பின்னர் இருவரும் பள்ளி வளாகத்தின் வெளியே நின்று பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது இருவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அற்புதம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வடிவேல் முருகனை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த வடிவேல் முருகன் துடிதுடித்து அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் அற்புதத்தை கைது செய்து சென்றுள்ளனர். பள்ளிக்கு முன்பு பட்டப்பகலில் ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #TUTICORIN #SCHOOL #TEACHER #MURDERED