'பரோட்டா சாப்பிட்டுக் கொண்டே'.. மனைவியிடம் போன் பேசிய புதுமாப்பிள்ளை.. நொடியில் நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 05, 2019 12:29 PM

புதுச்சேரியின் லாஸ்பேட்டையில் உள்ள கருவடிக்குப்பம் பாரதி நகரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருநெல்வேலியைச் சேர்ந்த சண்முகசுந்தரி என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவரும் புதுச்சேரியில் வசித்து வந்தனர்.

man dead while talking phone to wife and having parotta

புருஷோத்தமனோ, கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனிடையே, அம்மா வீட்டுக்குச் சென்று வர வேண்டும் என்று விரும்பிய, தனது மனைவி சண்முகசுந்தரியை, அவரது வீட்டில் விடுவதற்கென திருநெல்வேலிக்குச் சென்று கடந்தவாரம் விட்டுவிட்டு வந்துள்ளார் புருஷோத்தமன். ஆனாலும் புதிதாக திருமணம் ஆனவர்கள் என்பதால் அவ்வப்போது போனும் பேச்சுமாய் இருந்துள்ளனர். இந்த நிலையில், பரோட்டா சாப்பிடுவதற்காக பார்சல் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுக்கொண்டே, தன் மனைவி சண்முகசுந்தரியிடம் போன் பேசியுள்ளார் புருஷோத்தமன்.

அப்போது திடீரென அவருக்கு விக்கல் உண்டாக, தண்ணீர் குடியுங்கள் என்று போனில் சண்முக சுந்தரி ஓரிரு முறை சொல்லிப்பார்த்துவிட்டு பின்னர் ஹலோ, ஹலோ என்கிறாள். ஆனாலும் எதிர்முனையில் எந்தவொரு சத்தமும் இல்லாததால், போனைத் துண்டித்துவிட்டு மீண்டும் முயற்சித்துள்ளார் சண்முகசுந்தரி. அப்போது போனை யாரும் எடுக்காததால், உடனே அதே பகுதியில் இருக்கும் தனது சொந்தக் காரர் ஒருவருக்கு போன் அடித்து, தனது கணவர் என்ன ஆனார் என்று பார்க்கச் சொல்லியிருக்கிறார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த சொந்தக்காரர், புருஷோத்தமன் பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டுக்கு அருகில் மயங்கி இருந்ததைக் கண்டு மருத்துவமனை அழைத்துச் செல்ல, புருஷோத்தமன் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். திருமணம் ஆகி 6 மாதங்களே ஆன நிலையில், பரோட்டா சாப்பிடும்போது விக்கல் உண்டானதால் மட்டும்தான் புருஷோத்தமன் இறந்தாரா? வேறு எதாவது காரணங்கள் உள்ளனவா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #PUDUCHERRY #PAROTTA #HUSBANDANDWIFE