'தூக்கு போட்டுக்கிட்டா.. வந்து உங்க பொண்ண தூக்கிட்டு போங்க'... மருமகன் பண்ணிய போன்.. உருக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jul 16, 2019 01:29 PM

கரூர் மாவட்டம் பரமத்தி அருகே வசித்து வரும் கல்லூரி பேராசிரியர் ஜூவானந்தமும், நெரூர் சின்ன காளிபாளையத்தைச் சேர்ந்த அனிதாவுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு ஒரு வருடத்துக்கு முன்னர் திருமணம் நடந்தது.

mysterious death of wife, relatives urges to arrest husband

ஆனால் திருமணமாகி சில மாதங்களுக்கு பின்னர் அனிதாவை ஜீவானந்தம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.  அதன்படி அனிதாவின் பெற்றோரிடம், கார் வாங்குவதற்கு 3 லட்சம் ரூபாய் கேட்டதாகவும், ஆனால் அனிதாவோ, கூடிய சீக்கிரம் வாங்கித் தருவதாகக் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், அனிதாவின் கணவர் ஜீவானந்தம், அனிதாவின் தாயாருக்கு போன் செய்து, ‘உங்க பொண்ணு தூக்கு போட்டுக்கிட்டு, வந்து தூக்கிட்டு போங்க’ என்று கூறியுள்ளார். இதனால் ஜீவானந்தத்தின் ஊருக்கு விரைந்த அனிதாவின் உறவினர்கள், ஜீவானந்தத்தின் உடைமைகளை அடித்து நொறுக்கினர்.

மேலும், கார் வாங்கித் தரும்வரை பொறுமை இல்லாத ஜீவானந்தமும், அவரது தாயார் லட்சுமியும் சேர்ந்து  தங்களது மகளை கொனறுவிட்டதாக அனிதாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். அதோடு அனிதாவின் கணவரையும், கணவரின் தாயாரையும்  கைது செய்யாமல் நகர மாட்டோம் என தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தியதோடு, அனிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பிறகே யாரையும் கைது செய்ய முடியும் என்றும் கூறியுள்ளனர்.

Tags : #KARUR #HUSBANDANDWIFE