‘மனைவி தலையில் சிலிண்டரைப் போட்டுக் கொன்ற கணவர்..’ கொலை செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jun 03, 2019 12:21 PM

கோவை வேடம்பட்டியில் மனைவி தலையில் கணவர் சிலிண்டரைப் போட்டு கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

coimbatore man commits suicide after killing wife with heavy cylinder

மாரிமுத்து என்ற அந்த நபர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். அவருடைய மனைவி சுப்பாத்தாள் வெற்றிலை வியாபாரம் செய்து வந்துள்ளார். மாரிமுத்து தன்னுடைய மனநலம் பாதிக்கப்பட்ட தம்பியை கவனித்துக் கொள்ளுமாறு அவரது மனைவியைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கம்போல ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மாரிமுத்து, சுப்பாத்தாள் தலையில் சமையல் சிலிண்டரைப் போட்டு கொலை செய்துள்ளார். பின்னர் அவரும் நைலான் கயிற்றைக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து வந்த போலீஸார் இருவருடைய உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #HUSBANDANDWIFE #MURDER #SUICIDE