'முன்னாள் பெண் மேயர், கணவர் உள்பட 3 பேர் வெட்டிப் படுகொலை'... நெல்லையில் பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jul 23, 2019 07:47 PM

திமுகவை சேர்ந்த நெல்லை முன்னாள் பெண் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர், வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

nellai former dmk mayor uma maheshwari murdered

நெல்லை ரெட்டியார்புரத்திலுள்ள வீட்டில், நெல்லை முன்னாள் திமுக மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் அவர்கள் வீட்டில் இருந்த பணிப்பெண் மாரி ஆகியோர் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி, கொலைக்கான காரணம், குறித்து விசாரணை செய்து வருகின்றனர். முன்னாள் மேயர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூர கொலை சம்பவம் சொத்து தகராறால் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கடந்த 1996-ல் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில், உமா மகேஸ்வரி திமுக சார்பில் நெல்லை மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டார். நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

Tags : #MURDERED #NELLAI