'தலையணையால முகத்துல வெச்சு'.. தோழியின் உதவியுடன் பெண் செய்த 'பதறவைத்த' காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jul 22, 2019 05:53 PM

தனது தோழியின் உதவியுடன் காதல் கணவரின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கிக் கொன்றுள்ள பெண் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

chennai wife kills her husband with the help of her friend

7 வருடங்களுக்கு முன்பு காயத்ரி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டவர், ஆட்டோ ஓட்டுநரான நாகராஜ். நெற்குன்றத்தின் சக்தி நகரைச் சேர்ந்த நாகராஜுக்கும் காயத்ரிக்கும் 3 வயது குழந்தை உள்ள நிலையில், இருவருக்கும் இடையே சண்டை சச்சரவுகள் எழத் தொடங்கியது.

அதற்குக் காரணம், நாகராஜ் காயத்ரியை சந்தேகப்பட்டதுதான் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று காலை நாகராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைப் பார்த்து அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விசாரித்ததில், நேற்று இரவு, தம்பதியினர் இருவருக்கும் இடையில் சண்டை முற்றிப் போனதால், காயத்ரி வீட்டை விட்டுச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி காயத்ரியிடம் விசாரித்தபோது, தன்னை சந்தேகப்பட்டுக் கொண்டிருந்த தன் கணவரை, தன்னுடைய தோழி பானு என்பவருடன் சேர்ந்து, தன் கணவரான நாகராஜின் கணவன் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கிக் கொன்றதாக காயத்ரி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : #HUSBANDANDWIFE