'9 வயது சிறுவனை பாலியல்ரீதியாக துன்புறுத்தி, கல்லால் அடித்துக் கொன்ற கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 29, 2019 11:23 AM

நெல்லை அருகே 9 வயது சிறுவனை பாலியல்ரீதியாக துன்புறுத்தி, கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9 year old male kid sexually abused and murdered by youth near nellai

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான தளவாய். இவரது மகன் 9 வயதான கொம்பையா. இந்தச் சிறுவன் அதேப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு முடித்து, 4-ம் வகுப்பு செல்லவிருந்தான். இந்நிலையில், கடந்த 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விளையாடச் சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனைத் தேடத் தொடங்கினார்கள்.

ஆனால், சிறுவனைக் கண்டுபிடிக்க முடியாததால் அச்சம் அடைந்த பெற்றோர், தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் சிறுவனைத் தேடிவந்த நிலையில், குறிச்சிகுளம் கிராமத்தின் அருகே உள்ள நான்கு வழிச் சாலையை ஒட்டிய முட்புதருக்குள், சிறுவனின் உடல் கிடப்பதாக கடந்த செவ்வாய்கிழமையன்று தகவல் கிடைத்துள்ளது. போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, தலையில் கல்லால் பலமாக அடிபட்ட நிலையில் சிறுவனின் உடலை போலீசார் கைப்பற்றினார்கள்.

சிறுவனின் உடல் கிடந்த இடத்தை ஆய்வு செய்த போலீசார், பாலியல் தொல்லை காரணமாக சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம என சந்தேகித்தனர். இதனிடையே விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினருக்கு, அதே ஊரைச் சேர்ந்த 19 வயது இளைஞரான மாயாண்டி என்பவருக்குக் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், சிறுவன் எல்லோரிடமும் நன்றாகப் பழகக்கூடியவன் என்பதோடு, டிக் டாக் செயலியில் வீடியோ பதிவினால் அந்தப் பகுதியில் பிரபலமடைந்திருந்தது தெரியவந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவனை முட்புதருக்குள் அழைத்துச் சென்ற மாயாண்டி, அவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகத் தெரிகிறது.

இதனை சிறுவன் வெளியே சொல்லிவிடுவான் என்ற பயத்தில், அவன் தலையில் கல்லைப் போட்டு கொன்றதாகவும் மாயாண்டி கூறியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட மாயாண்டியை, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : #MURDERED #SEXUALLYABUSED