'உங்க டீச்சர என்ன பண்றேன் பாருங்க'.. மாணவர்கள் முன் வகுப்பறையில் நடந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jul 22, 2019 08:05 PM

தலைக்கவசம் அணிந்தபடி வந்த பொறியாளர் கணவர், தனியார் பள்ளியில் பணிபுரியும் தனது மனைவியின் வகுப்பறைக்குள் புகுந்து சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Husband went to class room and kills his Teacher wife

ராம்நாடு பகுதியைச் சேர்ந்த குருமுனீஸ்வரன் மற்றும் ரதிதேவி தம்பதியருக்கு, திருமணமாகி இரட்டைக் குழந்தைகள் இருக்கும் நிலையில், இருவருக்கும் கருத்துவேறுபாடுகள் எழுந்தது காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். குழந்தைகள் ரதிதேவியுடன் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், சென்னையில் கட்டிடப் பொறியாளராக இருந்துவரும் குருமுனீஸ்வரன்,  மதுரை திருமங்கலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் தனது மனைவி ரதிதேவியின் நடத்தை பற்றி, தனது நண்பர்கள் கூறிய தகவல்களை நம்பி,  ஹெல்மெட் மற்றும் திருப்புள்ளியுடன் ரதிதேவியின் வகுப்பறைக்குள் சென்று, மாணவர்களிடம், ‘இப்ப உங்க டீச்சர நான் குத்திக் கொல்லப் போறேன். எல்லாரும் பாருங்க’ என்று சொல்லிவிட்டு, ரதிதேவியை குத்திக் கொன்றுள்ளார்.

அதன் பின்னர் அவர் தப்பிக்க நினைத்தபோது, செக்யூரிட்டிகளால் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தன்னை மதிக்காமல், தன்னுடன் வாழாமல் இருந்ததால் மனைவியை கொன்றதாக குருமுனீஸ்வரன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Tags : #MURDER #HUSBANDANDWIFE #TEACHER