'இதுக்காகவா.. மனைவியை மதம் மாத்தினார்?’.. 'எவ்வளவு ட்ரிக்ஸா வேல பாத்துருக்காப்டி' .. பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Jun 18, 2019 12:58 PM
மனைவியை விவாகரத்து செய்வதற்காகவே, கணவர் ஒருவர் தன் மனைவியை மதமாற்றம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி பகுதியில் லாரி ஓட்டுநராக வேலைபார்த்து வரும், ரம்ஜான் அன்சாரி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உத்திரப் பிரதேசத்தின் ஆசம்கருக்கு பணிநிமித்தமாகச் சென்றபோது, அந்த ஏரியாவைச் சேர்ந்த மனிஷா யாதவ் என்கிற இந்துப் பெண்ணிடம் தன் பெயர் அகிலேஷ் யாதவ் என்றும், தன்னை ஒரு இந்து என்றும் கூறி, அப்பகுதியில் உள்ள ஜான்சி கோயிலில் மணம் முடித்தார்.
இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள் நிலையில், மனிஷா யாதவ் கர்ப்பிணியாகவும் உள்ளார். இதனிடையே, தன் கணவர் இந்து அல்ல, முஸ்லீம் என்றும், அவர் அகிலேஷ் யாதவ் அல்ல ரம்ஜான் அன்சாரி என்றும் மனிஷாவுக்குத் தெரிய வந்ததை அடுத்து இருவருக்குமிடையே தகராறு எழுந்தது. ஒருவழியாக ரம்ஜான் அன்சாரி, தன் மனைவியை சமாதனாப்படுத்தி, முஸ்லீம் மதத்துக்கு மாற்றியதாகக் கூறப்படுறது.
மேலும் ரம்ஜான் அன்சாரி ஏற்கனவே திருமணமானவர் என்கிற கூடுதல் தகவலும் மனிஷாவுக்கு தெரியவர, மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்த ரம்ஜான் அன்சாரி, 3 முறை தலாக் சொல்லி, தன் மனைவியை விவாகரத்து செய்துள்ளதாகக் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி மனைவியை எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து செய்துகொள்ளும் சவுகரியத்துக்காகவே, ரம்ஜான், தன் மனைவியை மதம் மாற்றியதாகவும் கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட முத்தலாக் சட்டத் திருத்த நடைமுறைக்கு பின்னர், அவசரச் சட்டம் இயற்றப்பட்டு அமலுக்கு வந்தது. ஆனால் ரம்ஜான் அன்சாரி, தடை செய்யப்பட்ட முத்தலாக்கினையே தம் மீது பிரயோகப்படுத்தியுள்ளதாக ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள ஹாஜாரிபாகின் காவல் நிலையத்தில் ரம்ஜான் அன்சாரி மீது புகார் அளித்துள்ள மனிஷா, இவ்வழக்கை பதிவு செய்யாமல் தன் கணவர் மீது விசாரணை நடத்தவும் கோரியுள்ளார்.
வரவிருக்கும் 17வது நாடாளுமன்ற கூட்டுத் தொடரில், முத்தலாக் தடைச் சட்டத்துக்கான மசோதா முக்கியத் திருத்தங்களுடன், நிறைவேற்றப்படலாமென தெரிகிறது.