‘சந்தேகத்தால் கணவர் செய்த காரியம்..’ அதிர்ச்சியில் உறைந்துபோன போலீஸார்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jun 19, 2019 01:59 PM

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஒருவர் மனைவியைக் கொலை செய்துவிட்டு அவரது தலையுடன் காவல் நிலையத்துக்கு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

man surrenders in police station with wifes head in Andhra

கலக்கடாவைச் சேர்ந்த உசேன் என்பவருக்கு அவரது மனைவி அம்மாஜி மீது நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கதிராயசெருவு அருகே சென்று கொண்டிருந்த அம்மாஜியின் கழுத்தை உசேன் ஆத்திரத்தில் அறுத்துள்ளார்.

பின்னர் துண்டித்த தலையை எடுத்துக் கொண்டு கலக்கடா காவல் நிலையத்திற்கு சென்ற உசேன் அங்கு நடந்த விவரங்களைக் கூறி சரணடைந்துள்ளார். அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அம்மாஜியின் சடலத்தைக் கைப்பற்றிய அவர்கள் பிலேர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தால் மனைவியைக் கொலை செய்து தலையுடன் கணவர் காவல் நிலையத்திற்கு வந்த சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Tags : #HUSBANDANDWIFE #BRUTALMURDER