‘கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட மனைவி..’ கணவர் சொன்ன அதிரவைக்கும் காரணம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jun 25, 2019 12:17 PM

திருநெல்வேலியில் மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவர் நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Husband kills wife for excessive use of facebook in Tirunelveli

கடந்த வியாழக்கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்த முத்துமாரி அரிவாளால் வெட்டப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார். மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவரது கணவர் கோமதி நாயகம் உறவினர்களுடன் சேர்ந்து கதறி அழுதுள்ளார். முத்துமாரியின் சடலத்தைப் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் மோப்ப நாயைக் கூட்டி வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அது அந்த வீட்டையே சுற்றிச் சுற்றி வந்துள்ளது.

முத்துமாரியை அடக்கம் செய்யும்வரை அமைதியாக இருந்த போலீஸார் பின்னர் கோமதி நாயகத்திடம் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்டிடத் தொழிலாளியான கோமதி நாயகம் மனைவி விரும்பிக் கேட்டதால் ஸ்மார்ட் ஃபோன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அதில் இணையதள சேவையைப் பயன்படுத்திவந்த முத்துமாரி எப்போதும் ஃபேஸ்புக்கிலேயே மூழ்கி இருந்துள்ளார். தொடர்ந்து நண்பர்களுடன் சாட்டிங் செய்து வந்த முத்துமாரியின் நடவடிக்கையால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்று தான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் முத்துமாரி ஃபேஸ்புக்கில் சாட்டிங் செய்து கொண்டிருந்ததால் கோமதி நாயகம் ஆத்திரமடைந்துள்ளார். அரிவாளால் சரமாரியாக வெட்டி முத்துமாரியைக் கொலை செய்துவிட்டு ஒன்றும் நடக்காததுபோல வெளியே சென்றுள்ளார். பின்னர் மனைவியை யாரோ கொலை செய்துவிட்டார்கள் என நாடகமாடிய அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலை செய்ய அவர் பயன்படுத்திய அரிவாளைக் கைப்பற்றிய போலீஸார் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். ஃபேஸ்புக்கால் கணவர் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #HUSBANDANDWIFE #BRUTALMURDER #FACEBOOK