'திருடங்கிட்டயே திருட்டா?'.. சென்னை பெண் போலீஸ் செய்த காரியம்.. சிக்கிய சிசிடிவி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Jul 05, 2019 11:56 AM
சென்னையின் பிஸியான ரயில்வே நிலையம் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம். இங்கு வந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில், சிறுசிறு திருட்டுக்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 48 வயதான சாகுல் ஹமீது என்பவரை சென்னை செண்ட்ரல் ரயில் நிலைய காவல் நிலைய போலீஸார் பிடித்துள்ளனர்.
அப்போது சாகுல் ஹமீது பலரிடம் இருந்தும் திருடிய பல விதமான பொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்த பொறுப்பினில் இருந்தவர்தான், 2004-ஆம் வருட பேட்ச் காவலரான கயல் வழி. சாகுல் ஹமீது திருடிய பொருட்களை கைப்பற்றி போலீஸ் மேலதிகாரிகளிடம் ஒப்படைத்த கயல்விழி, சாகுலிடமிருந்து பெறப்பட்ட 3 ஏடிஎம் கார்டுகளை மட்டும் தன்னகத்தே வைத்துக் கொண்டிருந்துள்ளார்.
விசாரணைக்குப் பிறகு சாகுல் ஹமீதின் வீட்டாருக்கு, போலீஸார் தகவல் அளித்ததன் பேரில், ஹமீதின் சகோதரி ஒரு புதிய புகாரை அளித்துள்ளது மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதன்படி, சாகுலின் போன் தம்மிடம் இருப்பதாகவும், சாகுலின் அக்கவுண்ட்டில் இருந்து 2.5 லட்சம் ரூபாய் பணம் எடுத்துள்ளதாக அந்த போனுக்கு மெசேஜ் வந்துள்ளதாகவும் போலீஸாரிடம் அவர் முறையிட்டுள்ளார்.
விசாரித்ததில், கயல்விழிதான், தன்னுடன் அந்த ஏடிஎம் கார்டினை வைத்திருந்ததாகவும், அவர் மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு ஏடிஎம் மெஷினில் இருந்து பணம் எடுக்கும் சிசிடிவி வீடியோக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளதோடு, கயல்விழி மீது உடனடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.