தப்பான பாதையில் ஏன் வரீங்கனு கேட்ட காவலர் மீது காரை ஏற்றிய பாஜக தலைவரின் டிரைவர்..! பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jun 25, 2019 09:49 AM

காரை நிறுத்தியதற்காக ஊர்க்காவல்படை காவலரை காரில் இடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BJP leader’s driver drags home guard officer on bonnet of his car

ஹரியானா மாநிலத்தில் ஊர்க்காவல்படை காவலர் ஒருவர் பணியில் ஈடுப்பட்டுருந்தபோது, அந்த வழியாக வந்த பாஜக தலைவர் சதீஷ் கோடாவின் கார் வந்துள்ளது. ஆனால், கார் தவறான பாதையில் வருவதை அறிந்த காவலர் உடனே காரை நிறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த காரை ஓட்டி வந்தவர், உடனே காவலரின் மீது காரை இடித்து, சுமார் 200 மீட்டர் காரின் மேலே காவலரை தூக்கிச் சென்றுள்ளார். இது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து தெரிவித்த ஊர்க்காவல்படை காவலர், ‘ நான் காரை நிறுத்தினேன். ஆனால் இது கோடா கார் என்று சொல்லி அவர் என்னை அடித்தார். பின்னர் இது தவறான பாதை என கூறினேன்’ என காவலர் தெரிவித்துள்ளார்.