'தமிழகத்தை உலுக்கிய 'ஆணவக்கொலை' ... 'காதலனை தொடர்ந்து'...'காதலிக்கு நேர்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jun 29, 2019 01:31 PM

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நிகழ்ந்த ஆணவக்கொலை தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் காதலனை தொடர்ந்து, காதலியும் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.

Mettupalayam Honour Killing the girl dies after injury

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியியை சேர்ந்தவர் கனகராஜ். இவரும் அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணும் தீவிரமாக காதலித்து வந்தார்கள். பிரியா பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் என்பதால், இருவரின் காதலுக்கும் கனகராஜின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்தநிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, பிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி கனகராஜின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் மீண்டும் கனகராஜ் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கனகராஜின் அண்ணன் வினோத் எந்த சூழ்நிலையிலும் பிரியாவை திருமணம் செய்துகொள்ள அனுமதிக்க முடியாது என உறுதியாக கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய கனகராஜ், ப்ரியாவுடன் சேர்ந்து சீரங்கராயன் ஓடை பகுதியில் வாடகை வீட்டில் தனி குடும்பம் நடத்தினார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கனகராஜின் அண்ணன் வினோத், அவர்கள் இருக்கும் வீட்டிற்கு சென்று இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். அந்தக் கொடூரத் தாக்குதலில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் பிரியா உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 3 நாட்களுக்கு மேலாக சிகிச்சைப் பெற்று வந்த வர்ஷினி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக கொலையில் ஈடுபட்ட வினோத்குமார் கடந்த 26ம் தேதி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #HONOURKILLING #POLICE #COIMBATORE #METTUPALAYAM