சென்னையில் அண்ணன் மனைவியை கத்தியால் சரமாரியாக குத்திய தம்பி’.. அதிர வைக்கும் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jun 28, 2019 06:41 PM

சென்னையில் தகாத உறவால் அண்ணன் மனைவியை தம்பி கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Women attacked her husbands brother in Chennai

சென்னை கிண்டியில் உள்ள மசுதி காலணியில் 11 -வது தெருவில் பானுப்பிரியா என்பவர், தனது இரண்டு மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். கணவரை இழந்து வாழும் பானுப்பிரியாவுக்கும், அவரது கணவரின் தம்பி மணிகண்டனுக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி நந்தப்பாக்கத்தில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை பானுப்பிரியாவின் வீட்டிற்க்கு வந்த மணிகண்டன் அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதனால் வலியில் துடித்த பானுப்பிரியாவின் சத்தததைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அங்கு வந்து மணிகண்டனிடமிருந்து பானுப்பிரியாவைக் காப்பாற்றியுள்ளனர்.

இதனை அடுத்து பானுப்பிரியாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்து மணிகண்டனை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் போலிஸார் நடத்திய விசாரணையில், தன்னுடன் தொடர்பில் இருந்த பானுப்பிரியா வேறொரு நபருடன் பேசி வந்ததால், ஆத்திரத்திரத்தில் கத்தியால் குத்தியதாக மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

Tags : #CHENNAI