'சேர்ந்தே சண்ட போட்டுட்டு'...'சேர்ந்தே எடுத்த விபரீத முடிவு'... குழந்தைகளை அனாதை ஆக்கிய பெற்றோர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jun 29, 2019 02:07 PM

குடும்ப பிரச்சனை காரணமாக ஒரே புடவையில் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Couple Suicide in a single saree

சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் மதன். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு திருமணமான இவருக்கு, கௌசல்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அவர்கள் இருவரும் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். மதன் டாட்டா ஏஸ் வாகனத்தை வாடகைக்கு விட்டு அதன் மூலம் தொழில் செய்து வருகிறார். இதனிடையே கணவன் மனைவி இருவருக்கும் அவ்வப்போது பிரச்சனை இருந்து வந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்து வந்த குழந்தைகள் இருவரும், வீட்டின் கதவை தட்டியுள்ளார்கள். ஆனால் வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் குழந்தைகள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது அவர்கள் கண்ட கட்சி அவர்களை அதிர செய்துள்ளது. வீட்டினுள் கணவன் மனைவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து குழந்தைகள் இருவரும் அலறியடித்துக் கொண்டு பக்கத்தில் வசிப்போரிடம் தெரிவித்துள்ளார்கள்.

உடனே அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பெற்றோர் எடுத்த இந்த அவசர முடிவினால், குழந்தைகள் இருவரும் ஆதரவின்றி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

Tags : #POLICE #SUICIDE #CHENNAI #COUPLE