'எந்த பஸ்? எங்க எறங்குறான் அவன்?'.. காவலரின் 'மனைவி' பக்கத்தில் அமர்ந்த பயணியின் கதி!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Jun 28, 2019 06:32 PM
கேரள அரசுப் பேருந்தில் தன் மனைவியின் அருகில் அமர்ந்த பயணி மீது, போலீஸார் ஒருவர் வழக்கு பதிய முனைந்த சம்பவம் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
காயங்குளத்தில் உள்ள, செக்கன் குளக்காராவில் இருந்த ஹரிபாட் வரையிலும் சென்ற அரசுப் பேருந்தில் ஏறிய இளைஞர் மானுபிரசாத் என்பவர் பேருந்தில் எல்லா இருக்கைகளும் நிறைந்திருந்ததால், பெண்கள் பகுதியில் காலியான ஒரு சீட்டில் அமர்ந்துள்ளார்.
ஏற்கனவே அந்த சீட்டில் அமர்ந்திருந்த பெண்மணி, மானுபிரசாத் அமர்ந்ததால், கோபமாக எழுந்து வேறு ஒரு சீட்டுக்கு மாறி அமர்ந்ததாகவும், அதன் பின்னர் அந்த பெண்மணி, காயங்குளத்தில் காவலராக பணிபுரியும் தனது கணவரிடம் இதுபற்றி கூறியுள்ளார். இதனையடுத்து, ஹரிபாட்டில் இறங்கிய அந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். புகார் அளித்த பெண்மணியையும் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அப்போது போலீஸாரிடம், பேருந்தில் இருந்த பயணிகள் சிலர், மானுபிரசாத் மீது தவறு இல்லை என்று வாதம் செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனாலும் பெண் ஒருவர் புகார் அளித்ததால், தாங்கள் விசாரிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளதாகக் கூறியதோடு, மானு பிரசாத்தையும், அந்த பெண்மணியையும் அடுத்த நாளும் விசாரணைக்கு வரச் சொல்லியிருக்கின்றனர். ஆனால் அந்த பெண் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதுபற்றிய பேசிய மானுபிரசாத் தன் மீது தவறில்லை என்பதை பேருந்தில் உள்ள அனைவரும் அறிவார்கள் என்றும், அந்த பெண் மீது தனது விரல் கூட படவில்லை என்றும் கூறியுள்ளார்.