'சென்னை'யில் 'பிரிட்ஜ் வெடித்து'... 'ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி'... 'அதிகாலையில் நடந்த துயரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jun 27, 2019 02:05 PM

சென்னையில் பிரிட்ஜ் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3  பேர் பலியான சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Refrigerator blast kills 3 of family members in chennai

சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரசன்னா. தனியாா் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறாா். இவர் வழக்கம் போல பணியை முடித்து விட்டு, வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு, தூங்க சென்றிருக்கிறார். வீட்டிலிருந்த அறையில் அவரும், மனைவி அா்ச்சனாவும் , ஹாலில்  தாயாா் ரேவதியும்  தூங்கி கொண்டிருந்தார்கள். இந்நிலையில் இரவு நேரத்தில் வீட்டில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு  பூஜை அறையில் தீப்பற்றிள்ளது.

அதிகாலை நேரம் என்பதால் வீட்டிலிருந்த அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர். இதனிடையே வீட்டில் ஏற்பட்ட  மின் கசிவின் காரணமாக, ஹாலில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ் வெடித்துள்ளது. இதனால் வீடு முழுவதும் புகை மண்டலமாக மாறிய நிலையில், வீட்டில் இருந்து வெளியில் வரமுடியாமல் மூவரும் தவித்துள்ளனா். அதிகாலை நேரம் என்பதாலும், வீடு முழுவதும் புகை மண்டலமாக மாறியதாலும் உதவிக்கு கூட யாரையும் அழைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கடுமையான புகை மூட்டத்தில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூவரும் பரிதாபமாக உயிாிழந்துள்ளனா். வீடு சாலையில் இருந்து உள்புறமாக இருந்ததால் தீ விபத்து நடைபெற்றது யாருக்கும் தொியவில்லை. காலை நேரத்தில் வீட்டிற்கு வந்த வேலைகார பெண் வீட்டின் கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படாத நிலையில், வீட்டிலிருந்து புகை வந்ததால் சந்தேகமடைந்த அவர் அருகில் வசிப்பவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அருகில் வசிப்பவர்கள் காவல் நிலையத்திற்கும், தீ அணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு கதவை உடைத்து விட்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். ஆனால் செய்தியாளர் பிரசன்னா அவருடைய மனைவி மற்றும் தாயார் பரிதாபமாக உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளனர். இது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் மரணமடைந்த சம்பவம் தாம்பரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #FIREACCIDENT #ACCIDENT #CHENNAI #REFRIGERATOR BLAST