'லாங்ல பாத்தாதான் இரும்புக் கம்பேனி'.. உள்ள போனா நடக்குறதே வேற.. சென்னையை அதிர வைத்த நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jul 01, 2019 09:35 PM

சென்னை அம்பத்தூரில் ரகசியமாக செயல்பட்டு வந்த பிளாஸ்டிக் தயாரிப்புக் கம்பெனியை சென்னை மாநகராட்சி பிளாஸ்டிக் ஒழிப்பு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ள சம்பவம் சென்னையில் காட்டுத் தீ போல் பரவிவருகிறது.

Chennai - Fake Company caught for Producing plastic

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்ட பிறகும் ஆங்காங்கே பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் இருக்கின்றன. இதனிடையே அம்பத்தூர் மண்டலப்பகுதிக்குட்பட்ட ஏரியாக்களில் பிளாஸ்டிக் கப்புகளில் டீ, காபி கொடுக்கப்படுவதை கண்காணித்த மாநகராட்சி பிளாஸ்டிக் ஒழிப்பு அதிகாரிகள், அந்த கடைகளுக்கு பிளாஸ்டிக் கப்புகளை சப்ளை செய்பவர்களை விசாரித்தனர்.

விசாரணையில் தெரியவந்த கம்பெனி, அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ளதை அறிந்து அங்கு சென்றபோது, இரும்பு பொருட்கள் நிறைந்த கம்பெனியாக இருந்ததும், அதிகாரிகல் திரும்பிப் போக நினைத்துள்ளனர். ஆனால் அந்த நிறுவனத்தின் உள்ளே எவ்வித தயாரிப்பு வேலைகளும் நடக்காமலேயே இயந்திரங்கள் ஓடும் சத்தம் கேட்டுள்ளது.

அந்த சத்தம், அதிகாரிகளை, ‘வாங்க.. வாங்க’ என்று சொல்ல, அதிகாரிகள் உள்ளே சென்று பார்க்க, காத்திருந்ததோ அதிர்ச்சி. ஆம், 6 டன் பிளாஸ்டிக் கப்களை உற்பத்தி செய்து வைத்திருந்துள்ளனர். உடனே அந்த நிறுவனத்தை சோதனை செய்த அதிகாரிகளுடன் நிறுவனத்தார் வாக்குவாதத்தில் ஈடுபட, மாநகராட்சி அதிகாரிகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளையும் துணைக்கு அழைத்தனர்.

இறுதியில் நிறுவனத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு, உரிமம் இல்லாமல் நிறுவனம் இயங்கி வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வெளியில் வேறு ஒரு கம்பெனியாகவும், உள்ளே பிளாஸ்டிக் கம்பெனியாகவும் ஒரு நிறுவனம் இருந்துள்ள தகவல் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags : #CHENNAI #AMBATTUR #PLASTIC