'கிரிக்கெட் வீரராக ஆசைப்பட்ட சென்னை மாணவர்'... 'கூகுள் நிறுவனத்தில் அடித்தது ஜாக்பாட்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jun 28, 2019 11:23 AM

சென்னையை சேர்ந்த மாணவருக்கு, கூகுள் நிறுவனத்தில், ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

chennai youth got the new job in google

சென்னை மேற்கு அண்ணாநகர், 6-வது தெருவில் வசிப்பவர் கே.என்.பாபு - ஜெயஸ்ரீ தம்பதியினர். இவர்களின் இளைய மகன் ‌22 வயதான ஷியாம். ஐ.ஐ.ஐ.டி. பெங்களூருவில் ஐ.எம். டெக் 5 ஆண்டு படிப்பை தேர்வு செய்து, கடந்த 2014-ம் ஆண்டு முதல் படித்து, இந்த மாதத்தில்தான் தன்னுடைய படிப்பை முடித்து இருக்கிறார். படிக்கும் காலத்திலேயே ‘கோடிங்’ தொடர்பான போட்டிகளில் நண்பர்களுடன் சேர்ந்து பங்கு பெற்று இருக்கிறார். இதுதான் கூகுள் நிறுவனத்தில் அவர் சேருவதற்கு பெரிய அடித்தளமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதத்தில் ஆன்லைன் வீடியோ மூலம் நேர்முகத்தேர்வை எதிர்கொண்டார். பின்னர் ஜெர்மன் நாட்டின் முனிச் நகரில் கூகுள் நிறுவனம் நடத்திய நேர்முகத்தேர்வில் நேரடியாக கலந்து கொண்டார். இந்நிலையில் அவரை ‘கூகுள்’ நிறுவனம், வேலைக்காக தேர்வு செய்து இருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை, அவருக்கு அண்மையில் தெரிவித்து இருக்கிறது. ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சம்பளத்தில், போலந்து நாட்டில் பணியாற்றுவதற்காக ‌ஷியாம் அக்டோபர் மாதம் செல்ல இருக்கிறார்.

இதுகுறித்து ‌ஷியாமின் தந்தை பாபு கூறும்போது, ‘முதலில் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்றுதான் அவன் ஆசைப்பட்டான். ஆனால் நாளடைவில் கிரிக்கெட்டை மறந்து படிப்பில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டான். அவனுடைய பாதையிலேயே நாங்களும் சேர்ந்து பயணித்தோம். இன்று நல்ல நிலைக்கு உயர்ந்து இருக்கிறான். எங்களுக்கு பெருமையாக இருக்கிறது’ என்றார்.

Tags : #CHENNAI #IIIT #GOOGLE