சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் விபத்து..! வெளியான சிசிடிவி காட்சிகள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jun 26, 2019 08:36 PM

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்மாற்றி வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Accident in Koyambedu Metro railway station caught on CCTV camera

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று இரவு சுமார் 1 மணி அளவில் தண்டவாளம் அருகே அமைந்துள்ள மின்சார கட்டுப்பாட்டு அறையில் உள்ள மின்மாற்றி வெடித்து சிதறியுள்ளது. இதில் கட்டுப்பாட்டு அறையின் ஜன்னல் தகடுகள் உடைந்து கீழே விழுந்துள்ளன. இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

இந்த சம்பவம் நள்ளிரவில் நடந்ததால் யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் போதிய பராமரிப்பு இல்லாததால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக கூறப்படுகிறது. அதனால் மெட்ரோ அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் நேற்று இரவு உயர்மின் அழுத்த கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நங்கநல்லூர் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : #CCTV #CHENNAI #METRO #KOYAMBEDU #ACCIDENT