'யாரும்மா.. இந்நேரத்துல ஏன் நிக்குறீங்க'.. ரோந்துக்கு சென்ற போலீஸாருக்கு அதிர்ச்சி.. சென்னையில் நடந்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Jul 03, 2019 11:14 AM
வேளச்சேரியில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி நள்ளிரவு நேரம் ரோந்து வந்து கொண்டிருந்த உளவுப்பிரிவு போலீசாருக்கு தூரத்தில் யாரோ ஒருவர் ஹெல்மெட் போட்டுக் கொண்டும், பர்தா அணிந்து கொண்டும் ஏடிஎம்க்குள் சென்று பணம் எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.
இந்த காட்சியை கண்ட உளவுப்பிரிவு போலீசார் ஒருவர் சற்றே குரலை வேகமாக உயர்த்தி, ‘யாருப்பா .. அங்க ஏன் எங்கே நிக்கறீங்க?? அதுவும் ஹெல்மெட் போட்டுக்கிட்டு.. இந்த நேரத்துல’ என்று கேட்டுள்ளார். ஆனால் பதில் எதுவும் வராததை அடுத்து போலீசார் அந்த நபரை நெருங்கியுள்ளனர். அப்போதுதான் ஹெல்மெட்டுடன் அந்த நபர் ஓட்டம் பிடிக்கத் தொடங்கி இருக்கிறார்.
அப்போதுதான், அது பெண் அல்ல ஆண் என்று புலப்பட்டது. விசாரித்ததில் ஏடிஎம் கொள்ளை அடிக்க வந்த ராஜ்குமார் என்பவர்தான் அவர் என்பதும் தெரியவந்தது. வந்தவாசியைச் சேர்ந்த ராஜ்குமார் சென்னை வேளச்சேரியில் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் இவரது தோள்பட்டையில் அடிபட்டு வெல்டிங் வேலைக்கு சரியாக செல்ல முடியாததாலும், அதே சமயம், குடும்பத்தில் உள்ள கடன் தொல்லை காரணமாகவும் வங்கியிலோ, வீடுகளிலோ அல்லது ஏடிஎம் போன்ற சிறிய இடங்களிலோ கொள்ளையடிக்கலாம் என முடிவெடுத்துள்ளார்.
ஆனால், தான் திருடுவது யாருக்கும் தெரியக்கூடாது என்பதால் இரவு நேரங்களில் பர்தா அணிந்து கொண்டும், பெண் போல ஹெல்மெட் அணிந்து கொண்டும், திருடுவதற்கு முயற்சித்துள்ளார். ஒரு வழியாக அவரை பிடித்து கைது செய்ய வந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.