'அரையிறுதிக்கு முன்னாடியா இப்டி நடக்கணும்?’... ‘காயம் காரணமாக ஆஸ்திரேலியா வீரர் விலகல்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jul 05, 2019 10:58 AM
அரையிறுதியை நெருங்கியுள்ள நிலையில், உலகக் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக, ஆஸ்திரேலிய அணி வீரர் விலகி வருவது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் முதலாவது அணியாக ஆஸ்திரேலியா அரையிறுதிக்குள் நுழைந்தது. அடுத்ததாக, இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தனர். நியூசிலாந்து அணி அரையிறுதியின் விளிம்பில் உள்ளது.
இந்நிலையில் வரும் சனிக்கிழமை நடைப்பெற உள்ள கடைசிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதற்காக பயிற்சியில் ஈடுபட்டு வந்த அணியின் மிடில் ஆர்டர் வீரர் ஷான் மார்ஷூக்கு, வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் அவர் குணமுடைய குறைந்தது 3 வாரங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியதால், தற்போது உலகக் கோப்பை அணியில் இருந்து விலகியுள்ளார். இதேபோல் அந்த அணியின், க்ளென் மேக்ஸ்வேலுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் அவருக்கு பெரிதாக பாதிப்பு இல்லாததால், போட்டியில் தொடர்ந்து விளையாட உள்ளார். ஆஸ்திரேலிய அணியில் அடுத்தடுத்து வீரர்கள் காயம் அடைந்து வருவதால், பெரும் கவலையை அளித்துள்ளது. எனினும் ஷான் மார்ஷூக்குப் பதிலாக, இந்திய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடிய, பீட்டர் ஹண்ட்ஸ்க்கோம் ஆஸ்திரேலிய உலகக் கோப்பை அணியில் இணைய உள்ளார். இறுதிப்போட்டியில் இந்திய-அஸ்திரேலிய அணிகள் மோதும் பட்சத்தில், இது இந்திய அணிக்கு சற்று சவாலாக இருக்கும்.
