பட்டப்பகலில் தனியே சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு..! அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Sep 07, 2019 03:19 PM

இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் செயினை பறித்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Chain snatching in Delhi Caught on CCTV camera

டெல்லி சாவ்லா என்னும் பகுதியில் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் சாலையில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் அப்பெண்ணை கடந்து செல்கின்றனர். பின்னர் சிறிது தூரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மீண்டும் வந்த வழியில் வண்டியை திருப்புகின்றனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் இறங்கிய நபர், அப்பெண்ணிடம் இருந்து செயினை பறித்துக்கொண்டு ஓடுகிறார். அதிர்ச்சியடைந்த அப்பெண் உடனே அந்த நபரை பிடிக்க முயல்கிறார். ஆனால் அதற்குள் இருவரும் இருசக்கரவாகனத்தில் தப்பி சென்றுவிடுகின்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : #CCTV #MOTORCYCLE #CHAIN #SNATCHING #WOMAN #CHHAWLAAREA