சோதனையின்போது ‘பெண்ணின் ஹேண்ட் பேக்கில் இருந்ததைப் பார்த்து’.. ‘அதிர்ந்து போய் நின்ற விமான நிலைய அதிகாரிகள்’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Sep 05, 2019 11:16 PM

விமான நிலையத்தில் கைப்பையில் மறைத்து எடுத்து செல்லப்பட்ட பிறந்து 6 நாட்களே ஆன குழந்தையை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

Woman held in Philippines after airport staff find baby in bag

ஃபிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலா விமான நிலையத்தில் அதிகாரிகள் பெண் பயணி ஒருவரின் கைப்பையை சோதனை செய்துள்ளனர். அப்போது அந்தப் பையில் பிறந்து 6 நாட்களே ஆன குழந்தை ஒன்று இருப்பதைப் பார்த்த அவர்கள் அதிர்ந்துபோய் நின்றுள்ளனர். அந்தப் பெண் தன் தோளில் மாட்டியிருந்த சற்றே பெரிதான கைப்பையில் வைத்து பச்சிளம் குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவரிடமிருந்து குழந்தையை மீட்ட அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அந்தப் பெண் குழந்தைக்கு தான் உறவினர் எனவும், ஆனால் அதை நிரூபிக்க தன்னிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளார். ஃபிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த குழந்தைகள் பெற்றோர் அல்லாதவர்களுடன் வெளிநாடுகளுக்கு பயணிக்க வேண்டுமானால் பெற்றோர் கைப்பட எழுதிய ஒப்புதல் கடிதம் அல்லது உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.

இதன் காரணமாக எந்தவித ஆவணங்களும் இல்லாத அந்தக் குழந்தையை காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ள விமான நிலைய அதிகாரிகள், அந்தப் பெண்ணை தேசிய புலனாய்வு முகமைக்கு விசாரணைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் கைப்பையில் வைத்து எடுத்து செல்ல முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #US #PHILIPPINES #AIRPORT #WOMAN #BABY #HANDBAG