‘காது கேளாத, வாய் பேச முடியாத’ பெண்ணிற்கு நடந்த பயங்கரம்.. ‘நாடகமாடிய மாற்றுத்திறனாளி இளைஞரை’.. மடக்கிப் பிடித்த குடும்பத்தினர்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 05, 2019 10:17 PM

அஹமதாபாத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த மாற்றுத்திறனாளி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Deaf speech impaired woman raped by differently abled man

குஜராத் மாநிலம் அஹமதாபாத் அருகே உள்ள அம்ராய்வாடி என்ற பகுதியைச் சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத 23 வயது பெண் ஒருவர் கடந்த ஞாயிறன்று வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். இரண்டு நாட்களாக அந்தப் பெண்ணை அவருடைய குடும்பத்தினர் தீவிரமாகத் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மங்கேஷ் பரத்வாஜ் என்னும் மாற்றுத்திறனாளி இளைஞர் தனது 3 சக்கர வாகனத்தில் அந்தப் பெண்ணை அவருடைய வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு பெண்ணின் குடும்பத்தினரிடம் அருகிலுள்ள மைதானம் ஒன்றில் அந்தப் பெண் இருந்ததாகவும், தான் அவரைப் பார்த்து அழைத்து  வந்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அந்தப் பெண்ணின் ஆடைகள் கிழிந்தும், கறைபட்டும் இருந்ததைப் பார்த்த அவருடைய குடும்பத்தினருக்கு மங்கேஷின் நடவடிக்கையில் சந்தேகம் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து மங்கேஷ் கூறிய மைதானத்திற்கு அவரையும் அந்தப் பெண்ணையும் அழைத்துச் சென்ற குடும்பத்தினர் அங்கிருந்த ஒருவரிடம் தங்கள் பெண்ணை காட்டி, இவரை இங்கு பார்த்திருக்கிறீர்களா எனக் கேட்டுள்ளார்கள்.

அதற்கு அவர் 2 நாட்களுக்கு முன்னால் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணை அங்கு கூட்டி வந்ததாகக் கூற, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மங்கேஷிடம் தீவிரமாக விசாரித்துள்ளனர். அதில் மங்கேஷ் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் மங்கேஷைக் கைது செய்துள்ளனர்.

Tags : #GUJARAT #AHMEDABAD #DEAF #SPEECHIMPAIRED #WOMAN #DIFFERENTLYABLED #RAPE