‘யாரு சாமி இவரு’.. ‘சும்மா காத்துலயையே பறப்பாரு போல’.. ஷாக் ஆகி நின்ற கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Sep 19, 2019 08:54 AM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 -வது டி20 போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

WATCH: Miller\'s catch to dismiss Shikhar Dhawan stuns Virat Kohli

இந்தியா-தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2 -வது டி20 போட்டி நேற்று மொகாலியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 149 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக டி காக் 52 ரன்களும் தெம்பா பாவுமா 49 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 40 ரன்களும், கேப்டன் விராட் கோலி 72 ரன்களும் எடுத்தனர். இந்திய பந்துவீச்சாளர்களில் தீபக் சஹார் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா, நவ்தீப் சைனி, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இப்போட்டியில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த தவானின் விக்கெட்டை பவுண்ட்ரி லைனில் ஒரு கையில் கேட்ச் பிடித்து டேவிட் மில்லர் வெளியேற்றினார். இதனை ஷாக் ஆகி பார்த்த விராட் கோலியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #VIRATKOHLI #INDVSA #TEAMINDIA #T20 #KINGKOHLI #DHAWAN #STUNNINGCATCH #DAVIDMILLER #VIRALVIDEO