'மேடம் இங்க சிசிடிவி கேமரா இருக்கு'.. இளம் பெண் ஜர்னலிஸ்ட்டுக்கு 'ட்ரயல் ரூமில்' நேர்ந்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Sep 08, 2019 02:01 PM

பெண் ஜர்னலிஸ்ட் ஒருவருக்கு ஹை-கிளாஸ் துணி கடையின் ட்ரயல் ரூமில் நிகழ்ந்த சம்பவம் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

woman filmed via CCTV in high class textile shop trial room

தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஹை-கிளாஸ் துணி கடை ஒன்றில், உள்ளாடைகளை வாங்குவதற்காகச் சென்ற இளம் பெண் ஜர்னலிஸ்ட் ஒருவர் தனக்குத் தேவையான துணிகளை எடுத்துக்கொண்டு, அவற்றை ஒரு முறை தனக்கு சரியாக ஃபிட் ஆகிறதா என்கிற சுய பரிசோதனைக்காக ட்ரயல் ரூமுக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்று அவர் உடை மாற்றிக்கொண்டிருந்தபோதுதான், அந்த கடையின் ஊழியர் ஒருவர், கதவைத் தட்டியுள்ளார். பதட்டமான இந்த பெண், என்னவென்று கேட்க, வெளியில் இருந்த ஊழியர், அந்த ட்ரயல் ரூம் சிசிடிவி கேமராவின் கண்காணிப்பில் இருப்பதாகவும், பக்கத்து ட்ரய்ல் ரூமுக்குச் செல்லுமாறும் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ந்துபோன அந்த பெண், அந்த கடை முதலாளி, ட்ரயல் ரூமில், தான் ஆடை மாற்றியதை சிசிடிவி மூலம் பார்த்துள்ளதையும் அறிந்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் போலீஸாருக்கு போன் செய்துள்ளார். ஆனால் அந்த கடை உரிமையாளர், தன் மகனை அழைத்து, போலீஸார் வருவதற்குள், அந்த வீடியோவை டெலிட் செய்துள்ளார்.

எனினும் போலீஸார் வந்ததன் பிறகு அந்த வீடியோவை எப்படியோ கைப்பற்றியதோடு, கடை உரிமையாளர்களின் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குறிப்பு: சித்தரிப்புப் படம்

Tags : #BIZARRE #DELHI #WOMAN #CCTV #TEXTILE #CAMERA