'மானியமில்லாத கேஸ் சிலிண்டர் விலை உயர்வு'... விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 01, 2019 06:57 PM

தமிழகத்தில் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளை கவலையடைய செய்துள்ளது.

non subsidised LPG cylinder price increased in november

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்தியாவின் சமையல் எரிவாயுவின் விலை மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த மாதத்தைக் காட்டிலும் கணிசமாக விலை உயர்ந்துள்ளது.

இன்று முதல், 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லா சிலிண்டரின் விலை  76 ரூபாய் அதிகரித்து, 620 ரூபாயிலிருந்து, 696 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3-வது மாதமாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு இருப்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோன்று வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் விலை, 120 ரூபாய் அதிகரித்து 1319 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

Tags : #SUBSIDISED #GAS #CYLINDER #PRICE #TAMILNADU #CHENNAI