‘சென்னையை நோக்கி நகரும் புதிய காற்றழுத்த பகுதி’.. ‘18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 03, 2019 02:46 PM

சென்னையை நோக்கி நகரும் புதிய காற்றழுத்த பகுதியால் 3 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Rain Alert in 18 Districts IMD Chennai TN List

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் புவியரசன், “தற்போது அந்தமான் பகுதியில் உருவாகி வரும் மேலடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி விடும். பின்னர் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களுக்கு அதிக மழை கிடைக்கும்.

தெற்கு அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு உருவானால்தான் சென்னைக்கு அதிக மழை கிடைக்கும். ஆனால் தற்போது உருவாகி வரும் காற்றழுத்தம் வடக்கு அந்தமான் அருகே உருவாகி வருகிறது. எனவே இதனால் ஆந்திராவுக்கே அதிக மழை கிடைக்கும். சென்னையை பொறுத்தவரை அதைவிட குறைவாக மழை கிடைத்தாலும் 3 நாட்களுக்கு மழை இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் வடகிழக்கு பருவக் காற்றின் சாதகப்போக்கு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சேலம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #CHENNAI #RAIN #ALERT #TN #DISTRICTS #LIST #IMD