‘வயோதிகம்’... ‘உடல்நலம் குன்றிய மகன்’... 'தந்தை எடுத்த விபரீத முடிவு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 01, 2019 07:29 PM

சென்னையில், மனநலம் பாதித்த மகனை கொலை செய்து விட்டு, தந்தையும் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

old man killed his son and suicide attempt in chennai

ஆழ்வார்பேட்டையில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரான விஸ்வநாதன் என்பவர் வசித்துவந்தார். இவருக்கு மனநலம் பாதித்த ரமேஷ் என்ற மகன் இருந்தார். வீட்டில் யாரும் இல்லாதநிலையில், வயோதிகம் காரணமாக மகனை கவனித்துகொள்ள முடியாமல் கவலையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர், தூக்க மாத்திரைகளை கொடுத்து மகன் ரமேசை கொலை செய்ததாகத் தெரிகிறது.

பின்னர், விஸ்வநாதனும் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வியாக்கிழமை நள்ளிரவில், விஸ்வநாதன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால், இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது உயிரிழந்த மகனுடன், விஸ்வநாதன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனையடுத்து, உயிரிழந்த ரமேசின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், உயிருக்குப்போராடிய விஸ்வநாதனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தங்களது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என விஸ்வநாதன் ஏற்கனவே கடந்த 28-ம் தேதி கடிதம் எழுதி வைத்திருந்தது கிடைத்ததாகத் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #SUICIDEATTEMPT #CHENNAI #MAN #OLD AGE