‘அரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது மஹா’.. ‘14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 31, 2019 08:57 PM

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Maha Cyclone Heavy Rain Alert in 14 districts IMD Chennai TN

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர், தேனி, நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள மஹா புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. எனவே மினிக்காய் தீவுகள், மாலத்தீவு, லட்சத்தீவு மற்றும் கேரள கடற்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 4ஆம் தேதி வங்கக் கடலில் வடக்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #MAHA #CYCLONE #HEAVYRAIN #ALERT #DISTRICTS #LIST #TN #IMD #CHENNAI