மனைவியின் 'பல்வரிசை சரியில்லை'.. என்பதைக் காரணமாகச் சொல்லி கணவர் செய்த பகீர் காரியம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 01, 2019 05:45 PM

ஹைதராபாத்தில் பல்வரிசை சரியில்லை என்ற காரணத்தைக் கூறி இஸ்லாமிய கணவர் தன்னுடைய மனைவிக்கு இஸ்லாமிய முறையில் முத்தலாக் கூறியுள்ளார். 

Hyderabad Hudband gives his wife triple talaq over her tooth

ஹைதராபாத்தில் ரக்‌ஷனா பேகம் என்கிற பெண், தனது பல்வரிசை சரியில்லை என கூறி தனது கணவர் தன்னிடம் முத்தலாக் கூறியதாக அவரது கணவர் முஸ்தபா மீது புகார் அளித்துள்ளார். 

மேலும் திருமணத்துக்கு முன்பே அதிக வரதட்சணை கேட்ட முஸ்தபாவுக்கு தனது வீட்டார், அவர் கேட்டதெல்லாம் கொடுத்தும், திருமணத்துக்கு பின்னர் மேலும் நகை, பணம் என வரதட்சணை கேட்டு கணவரின் குடும்பம் தன்னை துன்புறுத்துவதாகவும், தனது கணவரின் பெற்றோர் தன்னை 10-15 நாட்க வீட்டுக்குள் அடைத்து வைத்ததாகவும் இதனால் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டதாகவும் ரக்‌ஷனா பேகம் புகார் அளித்துள்ளார். 

இதனிடையே மீண்டும் தன்னை வந்து அழைத்துச் செல்வதாகக் கூறிய கணவர் முஸ்தபா தற்போது தனது பல்வரிசை சரியில்லை என்பதை காரணமாகக் காட்டி முத்தலாக் கூறியதாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

Tags : #MARRIAGE #TRIPLE TALAQ #HYDERABAD