'இப்படி நடக்கும்னு நெனைக்கலயே'.. 'கணவரை பயமுறுத்த முயன்ற மனைவி'.. திருமணம் ஆகிய ஒரு வருடத்தில் சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Aug 05, 2019 10:26 AM

பொய்யாக, கணவருக்கு பயம் காட்ட நினைத்து எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிப்பது போல் நடித்த மனைவி, எதிர்பாராத விதமாக உண்மையிலேயே தீக்கிரையாகியுள்ள சோக சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Wife pranks husband by self-immolation but lost her life

சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் உள்ளது நாகம்மை நகர். இப்பகுதியைச் சேர்ந்த இளம் பெண் அனிதா, மதுரவாயலைச் சேர்ந்த வினோத்குமாரை காதலித்துள்ளார். அதன் பின்னர், வீட்டார் சம்மதத்துடன் வினோத்குமாரை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டதோடு, மதுரவாயலில் தனி வீடு ஒன்றில் குடித்தனம் புழங்கி வந்துள்ளார்.

பின்னர், அனிதாவின் தந்தை இறந்துபோக நேரிட, சில நாட்கள் அனிதான், தன் தாய் வீட்டிலேயே, தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். கடந்த 5 மாதம் முன்வரை இவ்வாறு அனிதா வசித்து வந்துள்ளார். அப்போது அனிதாவின் கணவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்ததால், அனிதாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இப்படியான சூழ்நிலையில்தான், தன் கணவரை திருத்துவதற்காக, ஏதேதோ பேசி, அவரை பயமுறுத்தி தன் வழிக்கு கொண்டுவரும் முயற்சியில், தீக்குளிப்பது போல் எண்ணெயை ஊற்றி பற்ற வைப்பதுபோல் நடித்துள்ளார். ஆனால் அவர் சற்றும் எதிர்பாராத வகையில் தீப்பிடிக்கத் தொடங்கியதால் அவர் தீக்கிரையாகிப் போனார்.

அதன் பின் ஒருவாரம் சிகிச்சை பெற்றுவந்த அனிதா, நேற்று காலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அறிந்ததும், திருமுல்லைவாயல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணம் ஆகி ஒரு வருடமே ஆன நிலையில், அனிதாவின் இழப்பு, அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #FIREACCIDENT #HUSBANDANDWIFE