‘செத்து ஒழிங்க என்று கத்திக் கொண்டே’ தீ வைத்த நபர்.. ‘33 பேர் உயிரிழந்த பயங்கரம்..’

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Jul 19, 2019 01:01 PM

ஜப்பானில் உள்ள அனிமேஷன் ஸ்டூடியோவில் நடந்த தீ விபத்தில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

man screams you die then sets anime studio on fire in Japan

ஜப்பானின் கியாட்டோ நகரில் உள்ள பிரபலமான அனிமேஷன் ஸ்டூடியோ ஒன்றில் நேற்று காலை 70க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். அப்போது அந்தக் கட்டிடத்தில் திடீரெனத் தீப்பிடிக்க ஊழியர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு தப்பிக்க முயன்றுள்ளனர். அதற்குள் தீ எல்லாப் பக்கமும் பரவ பலரும் உள்ளேயே சிக்கியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த விபத்தில் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் 41 வயது நபர் ஒருவரை இதுதொடர்பாக போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த நபர்தான் இந்த விபத்திற்குக் காரணம் எனவும், கட்டிடத்திற்குள் நுழைந்த அவர் நீங்கள் சாகுங்கள் எனக் கூறிக்கொண்டே எரிபொருள் போன்ற திரவத்தை ஊற்றித் தீ வைத்ததாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Tags : #JAPAN #ANIMESTUDIO #FIREACCIDENT