‘சாமி கும்பிடும் போதா இப்டி நடக்கணும்’.. ‘நொடிப்பொழுதில் தீயில் சிக்கிய பெண்’.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jun 20, 2019 05:50 PM

கோவில் ஒன்றில் சாமி கும்பிடும் போது எதிர்பாராத விதாமாக பெண்ணின் புடவையில் தீ பற்றிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Woman suffers serious burn injuries after saree catches fire

கர்நாடக மாநிலம் ஹூப்ளி என்னும் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் சாமி கும்பிடுவதற்காக பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது சாமி கும்பிட்டுவிட்டு திரும்பும் போது அவரின் புடவையில் எதிர்பாரத விதாமாக தீ பற்றியது. இதனை கவனித்த அப்பெண் உடனே தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார்.

ஆனால் காற்று வேகமாக அடித்ததால் தீ மளமளவென புடவை முழுவதும் பற்ற ஆரம்பித்தது. இதனால் அப்பெண் கத்தி கூச்சல் போட்டுக்கொண்டே அருகில் இருந்த அறைக்குள் சென்றுள்ளார். அவரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக வாலியில் நீரை எடுத்து தீயை அணைக்க முயற்சித்துள்ளனர்.

இதனை அடுத்து நீண்ட நேர போரட்டத்துக்கு பின் தீயை முழுமையாக அணைத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் தீ உடல் முழுவதும் பரவியதால் அவர் தீவிர சிகிச்சையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : #CCTV #FIREACCIDENT #KARNATAKA #TEMPLE #WOMEN