'ஆஹா.. இது வேற மாதிரில்ல போகுது'.. விமானத்தில் கணவர் செய்த காரியம்.. பணிப்பெண் எடுத்த 'பலே' முடிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Jul 31, 2019 09:09 PM
நடுவானில் பறந்த விமானத்தில் கணவன் மனைவிக்கிடையே எழுந்த தகராறினால் விமானத்துக்குள் நிகழ்ந்த சம்பவம், அங்கிருந்த பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டியுஐ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று, பிரிட்டன் முதல் மெக்ஸிகோ வரை செல்வதற்காக, பயணிகளை சுமந்துகொண்டு பறக்கத் தொடங்கியது. இந்த விமானத்தில் பயணித்த 42 வயதான நபர் எட்வர்ட் மோர்கன் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் பயங்கரமான தகராறு எழுந்துள்ளது.
இருவருக்குமிடையே மெல்ல விவாதமாக எழுந்த இந்த சண்டை பெரும் வாக்குவாதமாக மாறியதை அடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் சிலர் இவர்களின் சண்டையை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். ஆனாலும் ஆத்திரமடைந்த எட்வர்டு மோர்கன் தன்னுடைய மனைவி மீது காரி உமிழ்ந்துள்ளார்.
இதனால் பதற்றமடைந்த விமானப் பணிப்பெண், இதை இத்தோடு நிறுத்தாவிடில், சண்டையின் போக்கை யாராலும் கட்டுக்குள் கொண்டுவர முடியாது என்பதை அறிந்து, உடனடியாக கேப்டனிடம் சொல்லி, இதர பயணிகளின் பாதுகாப்பையும் கருதி, பெர்முடா விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கியுள்ளார்.
அதன்பிறகு எட்வர்டு செய்த காரியத்துக்காக, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால், 5250 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டார்.