'நான்தான் நிஜமான ஹஸ்பண்ட்'.. 'நான் ஹஸ்பண்ட் இல்ல.. ஆனா குழந்தைக்கு அப்பா'.. ஒரே நேரத்தில் வந்த 3 ஆண்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 24, 2019 04:09 PM

கொல்கத்தாவில் ஒரு தனியார் மருத்துவமனையில், 21 வயது இளம் பெண் ஒருவர் டெலிவரிக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணுடன் அவரது தாயாரும் கணவர் என்று கையெழுத்து போட்ட ஒரு நபரும் இருந்துள்ளனர்.

3 men claims to be father of a womans newborn baby

அப்போது அங்கு விரைந்த இன்னொரு நபர், தான்தான் அந்த பெண்ணின் உண்மையான கணவர் என்றும் அவளுக்கு குழந்தை பிறந்தால், அதற்கு உண்மையான தகப்பன் தான்தான் என்றும் கூறி மருத்துவமனை ஊழியர்களிடம் சண்டையிட்டு தன் மனைவியை பார்க்க அனுமதி கேட்டுள்ளார். அப்போது மருத்துவமனை ஊழியர்கள், அந்த பெண்ணை ஹாஸ்பிடலில் சேர்த்தவரும், முதல் கணவர் என்று கூறிக்கொண்ட நபருமானவரை, இரண்டாவதாக வந்த நபருடன் பேசச் சொல்லியுள்ளனர்.  இதனால் இரண்டு ஆண்களுக்கும் சண்டை வெடிக்கத் தொடங்கியது.

இதனிடையே அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண்ணோ மயக்க நிலையில் இருந்துள்ளார். இதனால் இரண்டு ஆண்களும் கொஞ்ச நேரம் காக்க வைக்கப்பட்டனர். அதற்குள் 3வதாக வந்த நபர் நிலைமை புரியாமல், புதுவிதமாக அணுகியுள்ளார். அதன்படி, தான் அந்த பெண்ணின் கணவர் இல்லை, அதே சமயம்  அந்த பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தான்தான் அப்பா என்றும் கூறியுள்ளார்.

இதுக்கு மேல் நம்மால் ஆகாது என்று சொல்லி, மருத்துவமனை ஊழியர்கள் சேர்ந்து போலீஸுக்கு போன் செய்துள்ளனர். அவர்கள் வந்து விசாரித்த போது, மூவரில் ஒருவர், ‘நான் அந்த பெண்ணின் நண்பன்தான்’ என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார். இன்னொருவர் தான் தான் கணவர் என்பதற்கு திருமணச் சான்றிதழைக் கொண்டுவந்திருக்கிறார். ஆக, மீதமிருந்த இருவரில் யார் உண்மையான கணவர் என இரட்டை வேட நாயகர்கள் வரும் திரைப்படங்களின் க்ளைமாக்ஸ் மாதிரி, அந்த பெண் கண்விழிக்கட்டும் என காத்திருந்துள்ளனர்.

அந்த பெண் எழுந்ததும், திருமணச் சான்றிதழுடன் வந்தவர்தான் தன் கணவர் மற்றும் தன் குழந்தைக்கு அப்பா என்றும், இருவரும் கலப்பு, காதல் திருமணம் செய்து கொண்டு, ஆனால் வீட்டாருக்கு பிடிக்காததால் தனித்தனியே வாழ்வதாகவும், இன்னொருவர் தன்னை அட்மிட் செய்வதற்காக தன் கணவர் என்று பொய் கூறிய நண்பர் என்றும் கூறியுள்ளார்.

Tags : #HOSPITAL #HUSBANDANDWIFE #DAUGHTER #FATHER #BIZARRE #KOLKATA