‘நான் சொல்லிதான் அவரு செஞ்சாரு’.. ‘கணவர் கொலை வழக்கில்’.. ‘சரணடைந்துள்ள மனைவி வாக்குமூலம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 04, 2019 10:53 AM

குமாரபாளையம் அருகே கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி சரணடைந்துள்ள நிலையில் அவரது ஆண் நண்பரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Wife murdered husband with help of lover in Namakkal

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஏரி தெரு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் - செல்வி தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மது அருந்தும் பழக்கம் கொண்ட வெங்கடேசன் தினமும் குடித்துவிட்டு வந்து செல்வியை அடித்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் செல்விக்கு பெருமாள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் பெருமாளிடம் கணவர் அடித்து துன்புறுத்துவது குறித்துக் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து கடந்த 8ஆம் தேதி குடிபோதையில் இருந்த வெங்கடேசனை பாலத்திலிருந்து ஆற்றில் தள்ளிவிட்டு பெருமாள் கொலை செய்துள்ளார். பின்னர் அவர் செல்வியை மிரட்டி பலமுறை அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸில் சரணடைந்துள்ள செல்வி தன்னுடைய தூண்டுதலால்தான் பெருமாள் வெங்கடேசனைக் கொலை செய்தார் என வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவாகியுள்ள பெருமாளைத் தேடி வருகின்றனர்.

Tags : #NAMAKKAL #KUMARAPALAIYAM #HUSBAND #WIFE #AFFAIR #DRUNKEN #TORTURE #RIVER #SEXUAL #ABUSE